நியூ சிலாந்தில் தமிழ் மணி

No Comments


இத  பார்த்த உடனேயே டீ கடை பாய்லர் ஞாபகத்திற்கு வருதா? இது அது இல்லை .

இதன்  பெயர் தமிழ் மணி . உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி. இது மிசினரி(missionary) வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.
இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.[1]
இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது

அது  சரி வெறும் வெண்கல மணி தானே என்று எண்ணி விடாதீர்கள். இந்த படத்தையும் பாருங்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இனி தான் வருகிறது.








1836இல்நியூசிலாந்தை சார்ந்த மத போதகர் வில்லியம் Colenso மாவோரி ( moari) என்பவரை சந்தித்தார் அவர் உருளைக்கிழங்கு சமைக்க ஒரு இரும்பு பானையாக இந்த மணியை பயன்படுத்தி. அது வெண்கலத்தால் ஆனது , பதின்மூன்று சென்டிமீட்டர் நீண்ட மற்றும் ஒன்பது சென்டிமீட்டர் ஆழமாக இருக்கிறது, மேலும் அதன் மீது ஒரு வித எழுத்துக்கள் போரிக்கபட்டுள்ளத்தையும் பார்த்திருக்கிறார்.
அதை பற்றி கேட்டதற்கு, அது புயலால் சாய்ந்த ஒரு மரத்தின் வேருக்கு அடியில் அந்த மணி சிக்கியதாக கூறி இருக்கிறார். மேலும் அதுபல தலை முறைகளாக  அங்குள்ள iwi (பழங்குடியினர்) அவர்களுக்கு சொந்தமானது என நம்பப்பட்டது.

பின்னர் Colenso அந்த மணியை ஒரு இரும்பு பானைக்கு  பண்டமாற்று முறையில் வாங்கினார். அவரது மரணத்திற்கு பின் அந்த மணி அருங்காட்சியகதிற்கு வழங்கப்பட்டது, அது காட்சிக்கு போது பொதுமக்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியது.

மணியின் புகைப்படம் மற்றும் பிரதிகள் இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு  அனுப்பப்பட்டது. தமிழர்கள் அதை அடையாளம் கண்டு கொண்டனர். அது ஒருவகை கப்பலில் உப்யோகபடுதபடும் மணி என்று தெரியவந்தது. கடல் பயணத்தின் பொது பயன்படுத்தப்படும் ஓருவகை மணி அது . எல்லாவற்றுக்கும் மேலாக அதில் பொரிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் என்றும்
தெரியவந்தது. அவ்வெழுத்துக்கள் தற்கால எழுத்துக்களிலிருந்து வேறுபட்டுள்ளது (தொன்மையான தமிழ் எழுத்துக்கள்) எனவே அது, 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் எனவும் அறியப்பட்டுள்ளது அதாவது 1450ஆம் ஆண்டு வாக்கில் இது செய்யப்பட்டு இருக்கலாம்.

தமிழ் மணி நியூசிலாந்து இருக்க வந்தது எப்படி ஒரு தீர்வு காணாத மர்மம் உள்ளது. 

அவர்களுக்கு அது மர்மமாக இருக்கலாம் அனால் தமிழராகிய நாம் நிச்சயம் பெருமை பட வேண்டிய விஷயம் தான் இது. காரணம் நம் மூதாதையர் கடல் கடந்து வாணிபம் செய்ததையும், உலகை வென்றதையும் நாம் அறிவோம். எனது முந்தய பதிவில் அவர்களது கடல் பயணம் குறித்து எழுதி இருந்தேன்.
எனவே தமிழ் மணி நியூசிலந்தில் கிடைத்ததில் வியப்பேதும் இல்லை.
அண்டார்டிகாவில் கூட கிடைக்கலாம்.!! தேடி பாருங்கள்.

அது சரி அந்த மணியில் என்ன தான் எழுதி இருந்தது ?? என கேட்கிறீர்களா?

"மொஹைதீன் பாகசுடைய  கப்பல் மணி"



இது தான் எழுதி இருந்திச்சு...

யார் அந்த மொஹைதீன்??? தேடி பார்த்தேன்... பதில்.....
கடல்லையே இல்லையாம்!!!



ஆதாரம் : http://collections.tepapa.govt.nz/objectdetails.aspx?oid=213397&coltype=taonga%20maori&regno=me000842/1

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF

0 கருத்துக்கள்:

Post a Comment