பணம் பணம் பணம்.....(Running behind money)

No Comments
பணம் பணம் பணம்......(Running behind money)



ஒரு முறை தன மகனை பார்த்து ஒருவர் கேட்டார்..

"ஏன்டா இப்படி காலாட்டிகிட்டு உக்காந்து  டி. வி பாக்குற. எதையாச்சும் எடுத்து படிக்கலாம் இல்லை."

"படிச்சா?"

" பாஸ் அகலாம்"

"பாஸ் ஆனா?"

"நல்ல இன்ஜினியரிங் காலேஜ்ல சீட் கெடைக்கும்"

"கெடச்சா?"

"வெளிநாட்டில் வேளைக்கு போகலாம்"

"போனா?"

"நெறைய சம்பாதிக்கலாம். அப்புறோம் காலட்டிகிட்டு உக்கார்ந்து டி வி பாக்கலாம்.."

"அத தான நான் இப்போ செய்றேன்!!"

இதை  நகைசுவைக்காக நான் சொல்லவில்லை..நிகழ்காலத்தை கொன்று நமது எதிர்காலத்தை செதுக்க வேண்டுமா? இன்றைய பொழுதை வாழுங்கள். பணத்திற்காக விற்காதீர்கள்.

நீங்கள் உங்கள் வீடு மொட்டை மடியில் அமர்ந்து பௌர்ணமி நிலவை கடைசியாக என்றைக்கு ரசித்தீர்கள்? சிந்தித்து பாருங்கள் அது என்றோ சிறுவயதில்பார்த்ததாக நியாபகம் இருக்கும்.

சரி விடுங்கள் குயில்கூவும் ஓசையாவது ரசித்திருக்கிறீர்களா?..
இல்லை.  காரணம் நமக்கு அதற்கெல்லாம் டைம் இல்லை.

இதை கூட கவனிக்காமல் எங்கே ஓடுகிறோம்?.. எதை நோக்கி ஓடுகிறோம்?
யாருக்காக?..

இதற்கெல்லாம் ஒரே பதில் தான் "பணம்"

எல்லோருக்கும் பணம் சம்பாதிக்க அசை இருக்கும். அனால்

" எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?
 நெறைய.
நிறைய என்றால்?
நெறைய."  "

இதுதான் நமது இன்றைய நிலை.யோசித்து பாருங்கள் தோழர்களே பணம் என்பது நமது தேவையை பூர்த்தி செய்வதர்க்காகதான். அதற்காக நம் அன்புக்குரியவர்களை விட்டு தூரம் வந்து நாம் சம்பாதித்து என்ன ? அது வரும் அச்சிட பட்ட தாள் தான்.

ஒரு  முறை ஒரு மனிதன் தான் சம்பாதித்த பெரும் தொகையை கொடுத்து விலைஉயர்ந்த மகிழ்வுந்து  (car) வாங்கி  வந்து தன் வீட்டின் முன் நிறுத்தி வைத்தான்.

எல்லோரும் அவனை வியந்து பார்க்க வேண்டும் என்பது அவனது எண்ணம்.
அன்று மதியம் தனது மூன்று வயது மகன் காரின் முன்னால் விளையாடி கொண்டு இருந்தான் அருகில் வந்து பார்த்த அவனுக்கு பெரும் அதிர்ச்சி.

தன் மகன்ஒரு ஆணியை வைத்து அந்த காரின் மீது அதோ கிறுக்கி கொண்டிருந்தான்..

அவ்வளவுதான் கோபத்தில் அருகில் இருந்த பிரம்பை எடுத்து சிறுவனை சரமாரியாக அடித்து ஓய்ந்தான். பின்னர் தான் தெரிந்தது அவன் கையில் எடுத்தது பிரம்பு அல்ல இரும்பு கம்பி..

மகன்  மயங்கி சாய்ந்தான். கையில் இரத்தம்
வழிந்து ஓடியது.மருத்துவமனைக்கு விரைந்தான். மருத்துவர்கள் அவனது அழுகிய கைகளை துண்டிக்க நேர்ந்தது..



சிறிது நேரத்தில் மயக்கத்தில் இருந்த சிறுவன் தெளிந்தான்
"சாரிப்பா தெரியாம செஞ்சிட்டேன்.இனிமே அப்படி செய்ய மாட்டேன்.எனக்கு எப்போ திரும்ப கை முளைக்கும்?"

அவனிடம்  கண்ணீர் மட்டுமே பதிலாக இருந்தது. ஒன்றும் பேசவில்லை வீட்டிற்கு வந்ததும் தன் உயிரை மாய்துக்கொண்டான்.


பணத்தை பெரிதாக எடுத்து கொண்டதன் விளைவு இது. உண்மையில் பணத்தை பெற நாம் சில விஷயங்களை விற்று கொண்டிருக்கிறோம். பந்தம், பாசம், உறவுகள் எல்லாம் காற்றில் கரைந்துகொண்டிருக்கின்றன நமது பணத்திற்கான தேடலில்.


பணம் பணம் என்று தேடிஓடியதில் உங்கள் குழந்தையின் கிருக்கலோவியத்தை ரசிக்கத் தவரிவிட்டீர்கள், யாருக்காக இந்த பணமெல்லாம்? 


கோடி கோடியாய் வெளிநாட்டில் சம்பாதிக்கும் தந்தை குழந்தையின் முகத்தை (skype)ல் பார்த்து சிரிப்பதை விட. தன் குழந்தையின் செவ்விதழ் முத்தம் ஆயிரம் கோடிகளுக்கு சமம்.

யோசிச்சு  பாருங்க......




மறக்காம உங்க பின்னூட்டங்களையும் பதியுங்கள் தோழர்களே

0 கருத்துக்கள்:

Post a Comment