மதுரை சின்னப்பிள்ளை அம்மாள்
அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார்.
பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு சாதாரண உறுப்பினராக சேர்ந்து, இன்று அதனுடைய முக்கிய செயலராக விளங்கி கொண்டிருக்கிறார். "களஞ்சியம்" என்பது சிறுசேமிப்பை வலியுருத்தும் ஒரு சேவை அமைப்பு.
அன்றாடம் கூலி வேலை செய்யும் பெண்களிடையே சேமிப்பின் மேன்மையை வலியுறுத்தி "களஞ்சியத்தை" விரிவுபடித்தியவர்.இதனால் பலனடைந்த குடும்பங்கள் பல.
"The Hindhu" பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் "ஆரம்பத்தில் பத்து பேரிடம் இருந்து தலா இருபது ரூபாய் பெறப்பட்டு, இப்பொழுது, இந்தியா முழுவதும் சுமார் நான்கு லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது களஞ்சியம். மொத்த சேமிப்பு தொகை நூறு கோடியை எட்டி இருக்கிறது" என்றார்.
இவருடைய சேவையை பாராட்டி இந்திய அரசு "ஸ்திரீ சக்தி" விருதும் தமிழக அரசு "பொற்கிழி விருதும்" வழங்கி கவுரவித்தது. பிரதமரிடம் (வாஜ்பாய்) விருது வாங்கும் பொழுது, இந்தியப்பிரதமரே அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிய பெருமை சின்னப்பிள்ளை அம்மாள் அவர்களையே சாரும்.

0 கருத்துக்கள்:
Post a Comment